விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்துக்கு முன் பிரதமர் மோடி (படங்கள்)

தமிழகத்திற்கு 3 நாள் பயணமாகப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வருகை புரிந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டு வந்தார். கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் பிரதமர் மோடி ஓய்வெடுத்தார். அதன் பின்னர் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிறப்புப் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்றார். இதன் மூலம் அங்கேயே இன்று (30.05.2024) முதல் 3 நாட்களுக்குத் தாங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார். விவேகானந்தர் மண்டபத்தில் தற்போது பிரதமர் மோடி தியானத்தைத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தனது 3 நாள் தியானத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜூன் 1 ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.

Kanyakumari Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe