தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - பிரதமர் மோடி சூசகம்!

pm modi

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதேதமிழகஅரசியல் வட்டாரங்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இந்தநிலையில், நேற்று அஸ்ஸாமில் பேசியமோடி, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, எப்போது அறிவிக்கப்படும் என்பதைசூசகமாக தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேசியமோடி, "கடந்த முறை இந்த மாநிலங்களில், மார்ச்4 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே இம்முறைமார்ச்முதல் வாரத்தில்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்எனயூகித்திருக்கிறேன். தேர்தல் ஆணையம்அதனைமுறையாக அறிவிக்கும். தேர்தலுக்கு முன்பாகஎத்தனை முறைமுடியுமோ அத்தனை முறை அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறேன். மார்ச்7 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் தேதிகள்வெளியாகலாம். அதுவரைஎனக்குநிறைய நேரம் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதன்மூலம் மார்ச்7 ஆம் தேதி, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலசட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி வெளியாகும் என்பதைபிரதமர் மோடி மறைமுகமாக அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

elections Narendra Modi tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe