Skip to main content

கிசான் திட்டத்தில் முறைகேடு - மூன்று பேர் சஸ்பெண்ட்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

pm kisan scheme farmers tamilnadu officers suspended

 

 

தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மூன்று அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், விவசாயிகள் அல்லாதோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி இயக்குநர்கள் அமுதா, ராஜசேகரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக மேலும் 13 பேரை பணிநீக்கம் செய்து மாவட்ட வேளாண் இணைஇயக்குநர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 7 வட்டார தொழில் நுட்ப ஊழியர்கள், பயிர் அறுவடை பரிசோதர்கள் என 13 தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் வேளாண்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் 3 தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்