Starts today Plus Two practical exam

Advertisment

தமிழகத்தில் கரோனாபாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 08.04.2021 அன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பிளஸ் 2 செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளைக்கடந்த 9ஆம் தேதி அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.

இயற்பியல்,வேதியியல், உயிரியல் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. வெளியிடப்பட்டுள்ள செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில், 'ஒவ்வொரு குழுவின் செய்முறை தேர்வுக்கு முன்னரும் பின்னரும், அறையைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆய்வக அறையில் உள்ள அனைத்து கருவிகளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தீப்பிடிக்கக் கூடிய பொருட்களுக்கு அருகில் சானிடைசரைவைக்கக்கூடாது. வேதியியல் செய்முறை தேர்வின்போது பிப்பெட்டுக்குப் பதிலாக ப்யூரெட் பயன்படுத்தலாம். கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அவர்கள் குணமடைந்த பின் தனியாக செய்முறை தேர்வு நடத்தலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் பள்ளி இருந்தால், செய்முறை தேர்வை வேறு பள்ளியில் நடத்தலாம்' உள்ளிட்ட நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று (16.04.2021) பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கி,23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 1.5 லட்சம் மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க உள்ளனர்.