
சிவகாசி விஸ்வநத்தம் புதூரைச் சேர்ந்த முத்துக்குமார், தெற்கு ஆனைக்குட்டம் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தார். காவல்துறையினர் விசாரித்த போது, முத்துக்குமார் பிளஸ் 2 மாணவியை காதலித்ததும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாணவியின் உறவினர்கள் அவரைக் கொலை செய்ததும் தெரியவந்தது. இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளதாக, விஸ்வநத்தத்தைச் சேர்ந்த பெரியசாமி, பாண்டித்துரை, மாரீஸ்வரன், சரவணகுமார், ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு வயது 19 தான் ஆகிறது. அவர் காதலித்ததோ பிளஸ் 2 மாணவி. வயதைப் பரிசீலித்து, உரிய விதத்தில் அறிவுறுத்துவதை விட்டுவிட்டு, கொலை செய்தது கொடுமை அல்லவா?
Follow Us