பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடுமுதலமைச்சர் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசு அமைத்த குழு அளித்த மதிப்பீட்டு வழிமுறை பரிந்துரை தொடர்பாகவும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைதொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.