Advertisment

கரோனா குறைந்த பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

jh

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றைஅந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. பொதுமுடக்கம், தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

Advertisment

அந்த வகையில் தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்து 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக கரோனா தொற்று குறைந்தவுடன் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

corona prevention 12th exam anbil mahesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe