Advertisment

இன்று பிளஸ்- 2 தேர்வு முடிவுகள்!

master

இன்று (16.5.2018) காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றைப் பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் சமர்ப்பித்த டிக்ளரேஷன் ஃபார்ம் எனும் உறுதிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் 2 நிமிடங்களில் பள்ளிக் கல்வித்துறையால் அனுப்பப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வரும் 21 ஆம் தேதி திங்களன்று பிற்பகல் முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ, www.tnresults.nic.in என்ற இணையதளத்திலோ தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisment
today results exam Plus-2
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe