Skip to main content

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தேர்வு எழுதிய மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவர்களில் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

 

exam result

 

மாணவிகள் 93.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 

மாவட்டங்களில் திருப்பூர் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. 95.23% பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பெரம்பலூர் 95.15% பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் 94.97% பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. 
 

12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 2,697 மாற்றுத் திறனாளிகளில் 2,404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு; மாநில அளவில் வேலூர் மாணவி முதலிடம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Vellore student topper in Tamil Nadu with 497 marks out of 500 in CBSE 12th exam

 

நடந்து முடிந்த 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பள்ளிகளின் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஷிருஷ்டி என்கிற தனியார் பள்ளியை சேர்ந்த ரேஹா சுந்தரேசன் ராஜ் என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்களும் ஆங்கிலம், கணிதம், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 100க்கு தலா 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 

 

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ஷிருஷ்டி பள்ளி குழும தலைவர் சரவணன் உட்பட ஆசிரியர்கள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர். தனது உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களுக்கு மாணவி நன்றி தெரிவித்துக்கொண்டார். மாநில அளவில் 2வது இடத்தில் சென்னை பத்ம ஷேஷாத்ரி பள்ளியியும், 3வது இடத்தில் கோபாலபுரம் DAV பள்ளியும் வந்துள்ளன.

 

 

Next Story

''தமிழ்நாட்டிலேயே மூன்று பேர்தான்; இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது'' - மாணவி நந்தினியை நேரில் பாராட்டிய தமிழக டிஜிபி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

"There are only three people in Tamil Nadu; This is not an ordinary thing'' - DGP of Tamil Nadu praised the student Nandini in person

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

 

தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினி 600க்கு 600 எடுத்திருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவியை அழைத்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். கடந்த 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் நந்தினியின் உயர்கல்விக்கு உதவுவதாகவும் அதற்கேற்ற கல்வி நிறுவனங்களை விசாரித்து பரிந்துரை செய்வதாகவும் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் மாணவி நந்தினி நேரில் அழைத்துப் பாராட்டிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய சைலேந்திரபாபு, ''பன்னிரண்டாம் வகுப்பில் தமிழில் 600 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. தமிழில் தமிழ்நாட்டிலேயே மூன்று பேர் தான் நூற்றுக்கு நூறு வாங்கி இருக்காங்க. அதில் நீங்களும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கி இருக்கீங்க. இது மாதிரி சிறப்பாக படிக்க வேண்டும். அதிகமான மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது'' என்று கேட்டார்.

 

அதற்கு மாணவி நந்தினி, ''எனக்கு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது சிறுவயதிலேயே இருந்ததுதான். என்னுடைய குடும்பச் சூழல் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தது என நினைக்கிறேன். பெற்றோரின் நிலைமை துவண்டுபோற மாதிரியான விஷயமாக இல்லாமல் அதை நான் தூண்டுதலாக எடுத்துக் கொண்டது படிப்பதற்கு தூண்டுதலாக இருந்தது. இதனால் இவ்வளவு தூரம் இன்று படிக்க முடிந்தது. பெற்றோர், ஆசிரியர்கள் எல்லோருடைய சப்போர்ட் இருந்ததால் என்னால் படிக்க முடிந்தது'' என்றார்.

 

தொடர்ந்து பேசிய  டிஜிபி, ''சிலர் அவர்களது குடும்பச் சூழ்நிலையை நினைத்து வருத்தப்படுவார்கள். படிக்க முடியாது என்று நினைப்பார்கள். வீட்டினுடைய சூழ்நிலை சரியில்லை. பெரிய வருமானம் இல்லை என்பதே படிக்க மோட்டிவேஷன் என்று நந்தினி சொல்லி உள்ளார். வாழ்த்துக்கள்'' என்றார்.