Advertisment

பிளஸ்1,பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கரோனா வைரஸ்அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு பிளஸ்1 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை ஒத்தி வைக்கலாமா என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது திட்டமிட்டபடி பிளஸ்-1 பிளஸ்-2 தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

Plus 1, Plus 2 exams will take place as planned

தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் பயணிகள் நலன் கருதி 50 சதவீதபேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் நாளை காலை 5 மணி முதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர்கள் முக கவசம் அணியவும், ஒவ்வொரு முறை பயண முடிவிலும் கைகளைக் கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 3,400 மாநகரபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

bus Chennai police exam school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe