Advertisment

மயானத்திற்கு பாதை  இல்லை; இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்!

plight  carrying body through waist-deep water due lack access cemetery

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே சேராப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அந்த பகுதியில் உள்ள மதுரை மரம் ஓடை அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டுச்சென்றனர். ஆனால், மயானத்திற்குச் செல்ல பாதை வசதி இல்லாததால் ஓடையில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் சடலத்தைச் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

அது மட்டுமல்லாமல் சாலை வசதி இல்லாததால் கரடு முரடான பகுதியில் தூக்கிச் செல்லும் அவலமும் தொடர்ந்து நீடித்து வருவதால் உயர்மட்ட பாலமும் சாலை வசதியும் ஏற்படுத்த வேண்டுமென மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

kallakurichi Road
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe