Advertisment

பெண்களுக்கு கற்பு போன்றது ஓட்டு! விலைக்கு விற்காதீர்கள்- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேச்சு

புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பினால் நீக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளும் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் இணைக்கப்பட்டது. அதனால் கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களில் தொகுதியை மீட்க வேண்டும் என்று நோட்டாவுக்கு வாக்கு அதிகமாக பதிவாகி வருகிறது. அதேபோல இந்த தேர்தலிலும் நோட்டாவுக்காண பிரச்சாரம் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

Advertisment

naam tamilar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள். தொகுதிக்குள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

நேற்று சிவகங்கை தொகுதி நாம் தமிழர்கட்சி வேட்பாளர் சக்திப்பிரியா மற்றும் கட்சி நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கீரமங்கலம், நெடுவாசல், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடைவீதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் சக்திப்பிரியா பேசும் போது..

ஒவ்வொரு ஓட்டு நமக்கு முக்கியமானது. இதற்கு முன்பு வாக்களித்து வெற்றி பெற்றவர்கள் நம் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால்தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மேலும் நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் பிரச்சனைகஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஆட்சியில் இருப்பவர்கள் வரவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஓட்டுக்கும் பணம் கொடுத்து வாங்க வருவார்கள். பணத்துக்கு ஓட்டுப் போடாதீர்கள். பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமே அதே போல ஓட்டும் கற்பை போல முக்கியமானது தான். அதனால் தான் உங்கள் வாக்கை விலைக்கு விற்காதீர்கள் என்றார்.

vote election commission vellaporan vivasayi naam thamizhar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe