Plastic rice in government food ... shocked villagers!

Advertisment

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாகவும்,இதனால் பல மாணவர்களுக்குஉடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 Plastic rice in government food ... shocked villagers!

ஓசூர் அருகேகெலமங்கலம், ஜெ.காருப்பள்ளியில்உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசு சார்பில் அரிசி, பருப்பு போன்ற சத்துணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட சத்துணவு பொருட்களான அரிசியைசமைத்து சாப்பிட்ட மாணவர்களுக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கொடுக்கப்பட்ட அரிசியைஆய்வு செய்து பார்த்ததில், அதில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதைக் கண்டு ஊர் மக்கள் அதிர்ந்தனர். பிளாஸ்டி அரிசிகளை எடுத்து தண்ணீரில் போட்டதும் அவை மிதந்துள்ளன. இதுதொடர்பாகமாணவர்களின் பெற்றோர்கள் புகாரளித்ததை அடுத்து பள்ளிக்கு வந்த அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.