Skip to main content

சென்னையில் பிளாஸ்மா வங்கி...  அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்!!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
chennai

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து இரண்டாவதாக சென்னையில் பிளாஸ்மா வாங்கி திறக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிக்கு சிகிச்சை பெற ஒரே நேரத்தில் 7 பேரிடம் இருந்து பிளாஸ்மா செல்களை பிரித்தெடுக்க முடியும். தகுதியானவர்களிடம் இருந்து அதிகபட்சமாக 500 மில்லி லிட்டர் பிளாஸ்மா எடுக்கப்படுகிறது.

 

பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்த  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஏழு இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். சென்னை ஓமந்தூரார், ஸ்டான்லி, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். திருச்சி, சேலம், கோவை, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். பிளாஸ்மா தானம் வழங்குவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்