/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/birds.jpg)
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி பரதூர் கிராமத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியினை பறவைகளுக்கான உணவு தரக்கூடிய இடமாக மாற்றும் வகையில் ஆலமரம், அரசமரம், இலுப்பை மரம் உள்ளிட்ட பறவைகளுக்கான பழ வகை மரங்களையும் நட்டு மரக்கிளைகளில் கூடு கட்டி வாழ்வதற்கு உண்டான சூழலை ஏற்படுத்தும் வகையில் உயரிய நோக்கில் தொலைநோக்கு சிந்தனையோடு பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான தீர்வை நோக்கி திருச்சியைச் சேர்ந்த பசுமைப்படை பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் செயல்பட்டுவருகிறது.
அரியலூர் மாவட்ட வனத்துறை பச்சை மனிதர் தலைமையிலான கரைவெட்டி இளைஞர்கள் குழு, பொதுப்பணித்துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட காவல்துறை இணைந்து கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த பசுமையை நோக்கிய பயணம் என்பதைதுவங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றி 3 இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியில் வனத்துறை செயல்விளக்கக்கூட்ட அரங்கு அருகே பனை விதைகளை நட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு பனை அவசியம் என்பதனை வலியுறுத்தினார். அரியலூர் மாவட்ட காவல்துறை பசுமையை உருவாக்க அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கிறோம் என உறுதி அளித்தார். கரைவெட்டி ஏரியைச் சுற்றி 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது. தொடர்ச்சியாக பனைவிதைகள் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிராம பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வனத்துறை அலுவலர்கள் காவல்துறையினர் சிறுவர் சிறுமியர்கள் கலந்துகொண்டு ஆளுக்கொரு மரம் வீதம் 150 மரக்கன்றுகளைகூண்டுடன் வைத்தனர். மரக்கன்றுகளை வைப்பதோடு அல்லாமல் தலைமுறைகள் பயனுறும் வகையில் மனிதன் ஒவ்வொருவரும் அடையாளமாக விளங்க மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைதிருச்சிராப்பள்ளி பீனிக்ஸ் ரோட்டரி சங்கத்துடன் விருதுநகர் ரோட்டரி சங்கம் RTN. முத்து, இதயம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் ஆலமரங்கள் நடும் விழா இன்று செவ்வாய் காலை சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன் பங்கேற்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)