Plani Government hospital issue

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வி.கே. மில்லை சேர்ந்தவர் மணி. இவர் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி. இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. பிரியதர்ஷினி, உடல் நலக்குறைவால் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் இருந்த பிரியதர்ஷினியைகாண மணி அங்கு வந்தார். அப்போது மணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரியதர்ஷினியை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்கபிரியதர்ஷினி ஓடியுள்ளார். ஆனாலும், அவரை விடாத மணி தொடர்ந்து அவரை ஓட ஓட வெட்டியுள்ளார். இதனைக் கண்ட மருத்துவமனை பணியாளர்கள் மணியை மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும், பிரியதர்ஷினியை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். காலில் படுகாயம் அடைந்துள்ள பிரியதர்ஷினி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

மருத்துவமனை பணியாளர்களால்பிடிக்கப்பட்ட மணி பிறகு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.