அமைச்சர்கள் செல்லவிருந்த விமானம் தரையிறங்காமல் திரும்பியது!     

The plane on which the ministers were to go returned without landing!

திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், உள்நாட்டு விமான சேவையாக ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் ஆகியோர் காத்திருந்தனர்.

அப்போது விமான நிலைய பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து, சென்னையிலிருந்து திருச்சிக்கு இரவு 9.15 மணி அளவில் வந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் மீண்டும் சென்னை நோக்கி சென்றது. இதனால் அந்த விமானத்தில் சென்னைக்குப் பயணம் செய்வதற்காக காத்திருந்த அமைச்சர்கள் உட்பட 33 பயணிகள் திரும்பிச் சென்றனர்.

rain trichy
இதையும் படியுங்கள்
Subscribe