Advertisment

விமான நிலையத்தில் டிராக்டர் மோதி விமானம் சேதம்

Plane damaged by tractor collision at airport

சென்னையில் பயணிகளின் உடைமைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர், விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்,இண்டிகோ விமானத்தின் மீது டிராக்டர்மோதி விபத்து ஏற்பட்டு விமானம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ‘பயணிகளின் உடைமைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர், விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை முதல் திருச்சி வரை செல்லும் இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த விமானம் சரிசெய்யப்பட்டு வரும் 22ஆம் தேதி அன்று மீண்டும் விமான சேவை தொடங்கும்’ என்று கூறியுள்ளது.

மேலும், பயணத்தை ரத்து செய்த பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய கட்டணங்கள்திருப்பி செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதையடுத்து, சிறிய அளவிலான இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe