தமிழகத்தில் பொதுவாக ஜனவரி 16ஆம் தேதி கொடுக்கப்படும் போலியோ சொட்டு மருந்து,இந்த வருடம் அதே நாளில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை ஜனவரி 31ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட 43 ஆயிரத்து 51 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதில் 31ஆம் தேதியான நேற்று 5 வயதிற்கு உட்பட்ட 70 லட்சத்து 26 ஆயிரம்குழந்தைகளுக்கு சொட்டு மருந்து என இலக்கு திட்டமிட்டிருந்த நிலையில், 65 லட்சத்து 3 ஆயிரம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.