சென்னை தேனாம்பேட்டை காவல் சரகத்தில் வசிப்பவர் ரேணுகா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரை தொலைபேசியில் அழைத்த நபர், 'அந்த' உறவுக்கு அழைத்துள்ளார். தான் 'அப்படிப்பட்ட நபர்' அல்ல என்று விளக்கிய பிறகும், தொடர்ச்சியாக வேறு சில நபர்கள் போன் செய்து, பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்துள்ளனர்.

Advertisment

publive-image

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனால் சுதாரித்தரேணுகாஅழைத்த நண்பர்களிடமே, தன்னுடைய மொபைல் நம்பர் எப்படிக் கிடைத்தது என விசாரித்துள்ளார். அப்போது 'சென்னைபாலியல்தொழில் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டவாட்ஸ்ஆப் குரூப்ஒன்றில்இருந்து ரேணுகாசெல்நம்பர் பரமேஸ்வரன் என்பவரால் பகிரப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

publive-image

இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரேணுகாபுகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், பரமேஸ்வரன் பிரபல பீட்சா நிறுவனத்தில் டெலிவரி செய்யும் நபர் என்பதும், கடந்த 9-ந்தேதிரேணுகாவிற்குபீட்சா டெலிவரி எடுத்து சென்றவர், பின்னர் ரேணுகாவின்நம்பரை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தது தெரியவந்திருக்கிறது.

Advertisment

பரமேஸ்வரனையும், ரேணுகாவைதவறான கண்ணோட்டத்தில் அழைத்தவர்களையும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீட்சா நிறுவனத்தின் நிர்வாகியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.