Pity what happened to the boy who was at home due to stomach ache

வேலூரை அடுத்த காங்கேயநல்லூரை சேர்ந்தவர் கோடீஸ்வரன்(54). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோடீஸ்வரன் நியாய விலை கடையில் பணியாற்றி வருகிறார். அதே போன்று அவரது மனைவியும் வெளியே வேலைக்குச் செல்கிறார். இந்த நிலையில் கோடீஸ்வரனின் மூத்த மகன் ஹரி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் ஹரிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்று கோடீஸ்வரனும், அவரது மனைவியும் வெளியே வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் கயிற்றை வைத்து ஹரி விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென கயிறு சிறுவன் ஹரியின் கழுத்தை இறுக்கி மயங்கிக் கிடந்துள்ளார்.

இதையடுத்து மாலை கோடீஸ்வரன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சிறுவன் மயங்கி கிடந்துள்ளார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோடீஸ்வரன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.