Pitamagan film producer V. Ethurai passed away

Advertisment

சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை இன்று காலமானார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை (69). இவர் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா, என்னம்மா கண்ணு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வி.ஏ.துரை, அண்மையில், தான் வறுமையில் வாடி வருவதாகவும் மருத்துவ தேவைக்காக தனக்கு உதவி செய்ய வேண்டும் என திரைத்துறையினர்களுக்கும், நடிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் அவருடைய சிகிச்சைக்காக உதவி புரிந்திருந்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த வி.ஏ.துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.