Skip to main content

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2!

 

pisasu movie part 2 directer mysskin

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைப்பில் பிசாசு 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

 

உல்லாசம், டும் டும் டும் உள்ளிட்ட படங்களில் மிகச் சிறந்தப் பாடலைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிசாசு 2 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர் பாலா தயாரிப்பில் வெளியான 'பிசாசு' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிசாசு 2 பட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.