pr pandian

Advertisment

கேரள முதல்வர் பிணராய் விஜயனை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்தார்.

திருவனந்தபுரம் தலைமைசெயலகத்தில் இன்று மாலை நடந்த இந்த சந்திப்பில், பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.இராஜேந்திரன், மதுரை மண்டல கவுரவ தலைவர் எஸ்.ஆதிமூலம், குமரி மாவட்ட தலைவர் புலவர் செல்லப்பா, செயலாளர் வின்ஸ்ஆண்டோ, நெல்லை மண்டல தலைவர் புளியரை செல்லத்துரை, இரணியல் முருகேசப்பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் முதல்வர் பிணராய் விஜயனை சந்தித்தனர்.

இந்தசந்திப்பின் போது, கேரளம், புதுச்சேரி தமிழ்நாடு மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியை மூன்று மாநில முதலமைச்சர்களும் ஒன்றினைந்து சந்தித்து வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Advertisment

அது குறித்து கலந்து பேசி முடிவெடுப்பதாக கேரள முதல்வர் பிணராய் விஜயன் உறுதியளித்துள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.