Advertisment

விமானம் பழுது: 120 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி

 Pilot who saved the lives of 120 passengers

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானம், ஓடுதளத்தில் வேகமாகச் சென்று மேலே எழும்புவதற்குள் தொடு திரையில் இயந்திரக் கோளாறு சமிக்கை காட்டியதால் விமானி உடனடியாக மீண்டும் ஓடுதளத்தில் சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தினார்.

Advertisment

இதனால் 120 பயணிகளின் உயிர் தப்பியது. மேலும் 120 பயணிகளும் ஒரு தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டதோடு, இந்த விமானப் பழுது குறித்து இலங்கை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தைப் பழுதுபார்க்க அங்கிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை இலங்கையில் இருந்து திருச்சி வரும் சிறப்பு விமானம் 120 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் இலங்கை செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

Pilot srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe