Advertisment

விமானத்தில் தமிழ்ப் புத்தாண்டு கவிதை பாடிய விமானி! வைரலாகும் வீடியோ...

The pilot who sang the Tamil New Year poem on the plane!

சென்னை, தூத்துக்குடி இடையேயான விமானத்தில் துணை விமானி ஒருவர் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, வாழ்த்து கவிதை ஒன்றை பயணிகளிடம் பகிர்ந்துள்ளார். இது குறித்த காணொளியைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த துணை விமானி பதிவேற்றினார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் 6E7299 என்ற விமானம், புறப்படும் முன்பாக பிரியவிக்னேஷ் என்ற அந்த துணை விமானி, பாடிய அந்த கவிதை சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடிகிறது. இதனைப் பயணிகள் வெகுவாக ரசித்துக் கைதட்டி, துணை விமானிக்குப் பாராட்டு தெரிவித்தனர். துணை விமானியின் கவிதை தமிழின் அழகும், தமிழ் மாதங்களின் வரிசையும் பயணிகளை மகிழ்வித்தது.

Advertisment

Chennai flight
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe