Pig hunting after stealing electricity from high voltage wire

Advertisment

கிருஷ்ணகிரியில் உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரத்தை திருடி மான், பன்றி ஆகியவற்றை வேட்டையாட முயற்சித்த கும்பலை சேர்ந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கோள்ளப்பட்டி பகுதி சேர்ந்தவர் எத்திராஜ். இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கும்பல் ஒன்று மான், பன்றி உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காக தோப்பின் வழியே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து நேரடியாக கம்பி மூலம் மின் இணைப்பு கொடுத்து வேட்டையாட முயற்சி செய்துள்ளனர். இரவு நேரங்களில் இதுபோன்று வேட்டையாடிவிட்டு பகல் நேரங்களில் மின் இணைப்பை துண்டித்து விட்டு செல்வதை இக்கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கும்பலை சேர்ந்த ரஞ்சித் என்ற நபர் மின் இணைப்பை துண்டிக்க வந்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.