Advertisment

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைக்கு டிரெக்கிங் சென்ற 36 பேர் கடந்த 12-ம் தேதி காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் சிலர் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் பெற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குரங்கணி தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன் சுற்றுலா பயணிகள் கடைசியாக போட்டோ மற்றும் செல்பி எடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்களில் உள்ள பலரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். சிலர் மட்டுமே தப்பித்து நலமுடன் இருக்கிறார்கள்.