Advertisment

நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்கள்; அதிக அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவு

Pictures of political leaders on number plates; Court orders higher penalty

Advertisment

வாகன நம்பர் பிளேட்டுகளில் அரசியல் தலைவர்களின் படங்களை இடம்பெறச் செய்வது விதிமீறல் இல்லையா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தைமீறிவாகன நம்பர் பிளேட்டுகளில் விதி மீறில் செய்வதை தடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்தநீதிபதிகள், வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து காவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? அரசியல் தலைவர்களின் படங்களை நம்பர் பிளேட்டில் இடம்பெற அனுமதிப்பது விதிமீறல் இல்லையா? மண்டல போக்குவரத்துத் துறை அலுவலர்கள் இதனை ஆய்வு செய்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதிக அபராதங்கள் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

madurai highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe