ADVERTISEMENT

மூடப்பட்ட பிச்சாவரம் சுற்றுலா மையம்..! 

05:29 PM Apr 20, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இதில் கடலின் முகத்துவாரத்தில் சதுப்புநிலக்காடுகள் இயற்கை அரனாக அமைந்துள்ளது. இதனை ரசித்துச் செல்லும் வகையில் கோடை காலம், பள்ளி கல்லூரி அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா காரணமாக பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது. அதன்பிறகு தொற்று குறைந்த நிலையில கடந்த 6 மாதத்திற்குப் பிறகு மீண்டும் பிச்சாவரம் சுற்றுலா மையம் இயங்கியது.

இதில், தொற்று காரணமாக வீட்டிலேயே முடங்கியிருந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் இங்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தற்போது மீண்டும் கரோனா தொற்றின் 2-வது அலை அதிகமாகப் பரவி வருவதால் 20-ஆம் தேதி முதல் மீண்டும் பிச்சாவரம் சுற்றுலா மையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT