Advertisment

நடிகை நிலானியிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்: தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வாலிபர்

Photos close to actress

சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் நிலானி. தென்றல், தாமரை, பிரியமானவள் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்தவர். காதலும் கடந்து போகும், தெரு நாய்கள், நெருப்புடா ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்ததற்கு, படப்பிடிப்பின்போது அணிந்திருந்த போலீஸ் உடையிலேயே கண்டித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் நடிகை என்று பெரும்பாலானோருக்கு தெரியாததால் அப்போது அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

nilani

இந்த நிலையில் நிலானி தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்காக படப்பிடிப்பில் இருந்துள்ளார். அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவர், நிலானியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வது குறித்தும் பேசியுள்ளார்.

Advertisment

அப்போது படப்பிடிப்பில் இருந்தவர்கள், காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் நிலானி, மயிலாப்பூர் காவல்நிலையத்தில், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். நிலானி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Photos close to actress

இதற்கிடையில் சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி லலித்குமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில் அந்த வாலிபர் தற்கொலைக்கு முன்பு நிலானியுடன் இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Actress close Photos
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe