Published on 24/08/2021 | Edited on 24/08/2021

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி செலவில் 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.08.2021) காலை சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது கலைஞர் நினைவிடத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நினைவிடத்தின் முன் கலைஞர் பயன்படுத்தியதைப் போன்று பெரிய அளவிலான பேனா இடம்பெற உள்ளது.