தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெளியில் செல்வோர் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணியவேண்டும் என சுகாதாரத்துறை வழியுறுத்தியிறுக்கிறது. மேலும், மாஸ்க் அணியாமல் வெளியில் செல்வோருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Advertisment

Advertisment

இதனால், தமிழகத்தில் மாஸ்க் பயன்பாடும், அதன் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணிவதில் புதுமையைப் புகுத்தவும் பலர் முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் சூப்பர் ஹீரோஸ், அஜித், விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் உருவம் பதிக்கப்பட்ட மாஸ்குகள் தயாரிக்கப்பட்டு அதிகம் விற்பனையாகின. தற்போது, அதிலும் சிறப்பாகச் சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்ஒருவர் மாஸ்க் அணிபவரின் முகத்தையே அந்த மாஸ்க்-ல் பதிந்து விற்பனை செய்துவருகிறார்.