Advertisment

சிவசங்கர் பாபா மீதான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

cvb

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

Advertisment

வட மாநிலத்திற்கு தப்பியோடிய சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்த சூழலில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரை டெல்லியில் சிபிசிஐடி போலிஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில், அவர் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்க காவல்துறை தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி 28512500 மற்றும் 28512570 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொண்டு சிவசங்கர் பாபா மீதான புகார்களைத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

police Sivasankar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe