Skip to main content

கடலில் கலந்த எண்ணெயில் கலந்திருப்பது என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
'Phenol, grease in Ennur Estuary'-Pollution Control Board releases shock report

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மெரினா கடற்கரை வரை தற்பொழுது அந்த எண்ணெய் படிவுகள் படர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மெரினா மற்றும் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் கால்களை வைத்து விளையாடியவர்களின் பாதத்தில் எண்ணெய் துளிகள் ஒட்டிக்கொண்டது. இது தொடர்பாக வீடியோக்கள் எடுத்த சுற்றுலா பயணிகள், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். காலில் ஒட்டிய அந்த எண்ணெய் படலம் எவ்வளவுதான் கழுவினாலும் போகவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணுரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெயாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் கொடு! - சென்னையில் கூடும் தென்னை விவசாயிகள்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Replace palm oil with coconut oil!-Chennai coconut farmers

தமிழ்நாட்டில் அதிகமாக விளையும் தேங்காய் மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆனால் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வழங்கப்படுகிறது. ஆகவே உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யவும், தேங்காய் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்களை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் வலியுறுத்தி பல வருடங்களாகத் தேங்காய் உற்பத்தி விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில்தான் இதே கோரிக்கையை வலியுறுத்தி 16 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் சென்னையில் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கீரமங்கலம் சுற்று வட்டார கிராம தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட நக்கீரர் தென்னை உற்பத்தி நிறுவனம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான செல்வராஜ் கூறும்போது, நக்கீரர் பண்ணை நட்டத்தில் இயங்கவில்லை. ரூ. 50 லட்சம் நிதி ஒரு தனி நபரிடம் உள்ளது. அதில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் உள்ளது என்றார். இந்த நிறுவனம் மீண்டும் செயல்படுவது சம்பந்தமாக ஆலோசிக்க வேண்டும் என்றனர் பல விவசாயிகள். தற்போது நக்கீரர் பண்ணை பற்றி ஆலோசிக்க வேண்டாம். சென்னை போராட்டம் முடிந்தவுடன் விரைவில் இதேபோல கூட்டம் ஏற்பாடு செய்து ஆலோசித்து மீண்டும் நிறுவனம் இயங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவானது.

Next Story

எண்ணூரில் எண்ணெய் கலந்த சம்பவம்; 8.68 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் அறிவிப்பு

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Oil spill incident in Ennore; Chief Minister's announcement to provide relief of Rs 8.68 crore

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய்யாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 'எண்ணெய் கழிவு கடலில் கசிந்ததால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா 12,500 ரூபாயும், 6700 குடும்பங்களுக்கு தலா 7500 ரூபாயும் என் மொத்தம் 9001 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தமாக 8.68 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 787 மீன்பிடி படகுகளை சரி செய்ய தலா 10,000 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.