Phase 5 mega vaccination camp begins in Tamil Nadu

Advertisment

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 30,000 இடங்களில் 5- ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. சென்னையில் ஒரு வார்டுக்கு 8 முகாம்கள் என 1,600 முகாம்களில் கரோனா தடுப்பூசிப் போடப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், ஆட்டோக்கள் மற்றும் முக்கிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பூசிப் போடுவதை ஊக்குவிக்கும் வகையில் பல இடங்களில் பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.