P.F. for daughter's marriage. The state transport operator who demanded money from the fund! - Order to deliver in 2 weeks!

Advertisment

மகள் திருமண செலவுக்காக, தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் கோரிய நடத்துனருக்கு, இரண்டு வாரங்களில்உரிய தொகையை வழங்க, அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொது மேலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில் நடத்துனராகப் பணியாற்றி வரும் துரைசாமி, மகளின் திருமண செலவுகளுக்காக, தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாயை விடுவிக்கக் கோரி, பொது மேலாளரிடம் மனு கொடுத்தார். தனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, கரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால், போக்குவரத்துக் கழகம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், மனுதாரரின் கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

Ad

இதைப் பதிவு செய்த நீதிபதி, துரைசாமியின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து எவ்வளவு வழங்க முடியும் எனக் கணக்கிட்டு, 2 வாரங்களில் வழங்க போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.