ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல்... திமுக ஏற்குமா?- பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!

Petrol Under GST ... Will DMK accept? - BJP Annamalai question!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாத உரிமை தொகை போன்றவற்றை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியான அதிமுக இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவின் அண்ணாமலை ''பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. இதையே தமிழக நிதியமைச்சர் சொல்வாரா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீனவர் விரோத செயல்களைக் கண்டித்து நாளை மறுநாள் பாஜக மீனவர் அணி தலைமையிலும், விவசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் மாதத்திலும் போராட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது சொன்னதை தற்பொழுது சொல்லத் தயாரா. இதையே தற்போதைய தமிழக நிதியமைச்சர் சொல்வாரா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe