Advertisment

நள்ளிரவில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தீவிர விசாரணை!

Petrol thrown at police station in the middle of the night

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம்சிப்காட்காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் சுமார் 12.00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் இரண்டுபெட்ரோல்குண்டுகளைகாவல் நிலையத்தின் மீது வீசி சென்றுள்ளனர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால் (சாத்தியிருந்ததால்) அதன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய கண்ணாடி பாட்டிலால் ஆனபெட்ரோல்குண்டு விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவஇடத்திற்குவந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தசுக்லாநேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும்சிசிடிவிகேமிராக்களைஆய்வு செய்த காவல் துறையினர் பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் பத்துக்கும்மேற்பட்டோரைபிடித்து வந்துசிப்காட்காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் காவல் நிலையம் மீதுபெட்ரோல்குண்டுவீசப்பட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police ranipet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe