Advertisment

'காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன்' - எனக்கே மாற்றி அனுப்புகிறார்கள்-வைரமுத்து ட்வீட்  

petrol price hike... vairamuthu twit

சமீப காலமாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயைத் தொட்டுள்ளது. பெட்ரோல் விலையுயர்வால்மக்களின் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உருவாகும் சூழலில், விலைவாசி ஏற்றம்குறித்தஅச்ச உணர்வு அதுவும், இந்தக் கரோனா காலத்தில் மக்களிடையே மேலோங்கியுள்ளதுஎன்றும் கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் தமிழ் பாடல் வரிகள்மாற்றப்பட்டு, பெட்ரோல்விலையேற்றம் குறித்துமீம்ஸுகளாகசமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

Advertisment

petrol price hike... vairamuthu twit

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துட்வீட்ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்: 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு,பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவுக்கு, வைரமுத்து எழுதியமேலும் சில பாடல்களைப் பெட்ரோல்விலையுடன் ஒப்பிட்டுபாடல் வரிகளைமாற்றி எழுதி ரசிகர்கள்பெட்ரோல்விலையேற்ற வேதனையைதெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அவற்றில் சில...

'சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்

ஆஹா அவனே கொள்ளையனடி'

'உசுரே போகுது உசுரே போகுது

பெட்ரோல் விலைய பார்க்கையிலே...'

'ஒரு பொய்யாவதுசொல்கண்ணே

பெட்ரோல் விலை குறையும் என்று...’

petrol price hike Vairamuthu VIRAL MEMES
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe