Skip to main content

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

kl;

 

சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 94.54 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ரூ. 88.34-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 மாநில தேர்தல்களை முன்னிட்டு சில வாரங்களாக விலை உயர்த்தபடாமல் தொடர்ந்து ஒரே விலையிலேயே இருந்துவந்தது. பின்னர் தேர்தல் முடிவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டுவந்தது.

 

இந்நிலையில், ஆச்சரியமாக இன்று (19.05.2021) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே பெட்ரோல் விலை விரைவில் 100ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடு பெட்ரோல் விலை உயர்வை கவனித்துவருகிறார்கள். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை தற்போதே 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்