Skip to main content

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

fg

 

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

 

பெட்ரோல் விலை ரூ. 92.70 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ரூ. 86.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 மாநில தேர்தலை முன்னிட்டு சில வாரங்களாக விலை உயர்த்தப்படாமல் தொடர்ந்து ஒரே விலையிலேயே இருந்து வந்தது. இதையடுத்து, தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்றில் (04.05.2021) இருந்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் லிட்டருக்கு 19 காசுகளும் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  பெட்ரோல் விலை விரைவில் 100ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடு பெட்ரோல் விலை உயர்வை கவனித்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்