சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றை விட சிறிய அளவு விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.86.96 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசல் விலை 26 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.79.72க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.