/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_230.jpg)
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அப்பகுதியின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் உள்ளார்.இவரது அண்ணன் பீட்டர், அதே பகுதியில் தனது சகோதரர் பாஸ்கர் வீட்டின் அருகே வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் பாஸ்கரும், பீட்டரும் அவரவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது இரு சக்கரத்தில் வந்த மர்ம நபர்கள் பீட்டர், பாஸ்கர் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். குண்டு வெடித்த சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டுருந்தவர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் வாசலிலிருந்த மீன் பிடி வலைகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)