பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சென்னை, திருவெற்றியூர் நகராட்சி அலுவலகம் அருகே சமத்துவ மக்கள் கட்சியின் சென்னை மண்டல செயலாளர் மகாலிங்கம் தலைமையில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைத்திட வேண்டி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.