பெட்ரோல், டீசல் விலை இன்று தமிழகம் முழுவதும் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை பெட்ரோல் டீசல் விலை உயர்த்த படாமல் இருந்து வந்தது. ஜூன் மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக விலை மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று பெட்ரோல் 11 காசுகளும், டீசல் 13 காசுகளும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் 87.72 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 78.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.