Published on 31/10/2021 | Edited on 31/10/2021

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகிய எரிபொருட்களின் விலைகளைத் தாறுமாறாக ஏற்றி வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டிக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று (31/10/2021)தமிழ்நாடு முழுவதும் சைக்கிள் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
அந்த வகையில், தென்சென்னை மாவட்ட குழு சார்பாக, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ். ஏழுமலை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டன உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர், விலையை உயர்த்தியது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் அதன் காரணமாக மக்களோடு மோதிக் கொண்டிருப்பது ஆட்டோ தொழிலாளர்கள் என்று கூறினார்.