பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து நேற்று (22/02/2021) தமிழகம் முழுவதும் தி.மு.க. கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக, நாகை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, அவுரி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, தப்படித்து, சவ ஊர்வலம் போல பிரதான வீதிகளில் நடந்து வந்து பெண்கள் கும்மியடித்தும், ஒப்பாரி பாடல் பாடியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இது பலதரப்பட்ட மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.