Advertisment

பெட்ரோல் பங்கில் போலீஸ் அடாவடி ! கை முறிந்து சிகிச்சையில் இளைஞர் !

h

கோவை சூலூர் சர்க்கிளில் ரைட்டராகப் பணியாற்றுபவர் மாதப்பன். இவர் நேற்று சாதாரண உடையில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மாலை நான்கு மணியளவில் பெட்ரோல் போடச் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது அங்கு பணியில் இருந்த அசோக்ராஜா,"சார்..மதியம் ரெண்டரை மணியோடு பெட்ரோல் அடிக்கற டைம் முடிஞ்சது.அதுனால பெட்ரொல் பங்கை க்ளோஸ் பண்ணி விட்டோம்"...எனச் சொல்ல.

Advertisment

டேய்...நான் போலீஸ்டா..அடிடா..என மாதப்பன் அதட்டியிருக்கிறார் சார்.. சாவிகளை ஓனர் எடுத்துட்டு போயிட்டாரு..என்றிருக்கிறார்.

‘’என்னடா..? சொல்லச் சொல்ல...பெட்ரோல் தரமாட்டேன்னு சொல்லிட்டே இருக்க..?’’என மிரட்டிய சர்க்கிள் ரைட்டர் மாதப்பன்,பெட்ரோல் பங்க் மூடிட்டதால தானே பெட்ரோல் அடிக்க மாட்டேங்கறே..?

எந்நேரமும் ஸ்டேசன் திறந்தே தான் இருக்கும்.அங்க எப்படி அடிக்கறாங்கன்னு பாரு..? என அசோக்ராஜை ஸ்டேசனுக்கு இழுத்துப் போன மாதப்பன்..அசோக் ராஜை சரமாரியாக வெளுத்து உள்ளார்.இதில் அசோக்ராஜின் கை உடைந்தது.

இதனைத் தொடர்ந்து அசோக்ராஜ் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து...மாதப்பனை பெட்ரோல் வாசனையே அடிக்காத ஆயுதப் படைக்கு மாற்றியிருக்கிறார் எஸ்.பி.

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe