பெட்ரோல்நிரப்பும் நிலையத்தில் இளைஞர்கள் மதுபோதையில்தகராற்றில்ஈடுபட்டது தொடர்பானசிசிடிவிகாட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம்,ஜானகிபுரம்பகுதியில் உள்ளபெட்ரோல்நிரப்பும்நிலையத்திற்குசென்ற ஆறு பேர் பெட்ரோல் நிரப்பிவிட்டு நீண்ட நேரமாகியும் அங்கிருந்து வாகனத்தைஎடுக்காமல் இருந்துள்ளனர்.பெட்ரோல்நிலைய மேலாளர் கார்த்திக் வாகனத்தை அப்புறப்படுத்தும் படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள்மேலாளரைசரமாரியாகத்தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்தலாரிஓட்டுநரையும் தாக்கிய கும்பல்,பெட்ரோல்நிலையத்தில் இருந்தபொருட்களைசூறையாடியது.
இது தொடர்பான, காட்சிகள் அங்கிருந்தசிசிடிவிகேமராவில்பதிவாகியுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.